உள்ளூர் செய்திகள் (District)

ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

Published On 2023-05-07 08:36 GMT   |   Update On 2023-05-07 08:36 GMT
  • ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று வழங்கும் அப்ரண்டீஸ்சிப் சான்றிதழ் பெறலாம்.
  • தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை (8ம் தேதி) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நாளை (8-ம் தேதி) திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை, மாவட்ட அளவில் பிரதான் மந்திரி நேஷனல் அப்ரண்டிஸ்சிப் (தொழில் பழகுநர்) சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டும் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேர்வு செய்ய உள்ளனர்.

இதில், ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்கள், 10ம், 12ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி (பிஇ, பிஏ., பி.எஸ்சி, பி.காம்) கல்வி தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐயில் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (என்.ஏ.சி) சான்றிதழ் பெற்று பயன்பெறலாம்.

மேலும், 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வித் தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் பிரெஸ்ஸர் அப்ரண்டீஸாக சேர்ந்து தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

இதே போல், டிப்ளமோ மற்றும் டிகிரி கல்வி தகுதியுடையவர்கள் ஆப்சனல் பிரிவுகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று வழங்கும் அப்ரண்டீஸ்சிப் சான்றிதழ் பெறலாம். தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும், ஓராண்டு சலுகையும் உள்ளது.

இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.8,500 முதல் ரூ.16 ஆயிரம் வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. எனவே, இம்முகாமில் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு எம்/167, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி 2, ராயக்கோட்டை சாலை, கிருஷ்ணகிரி என்கிற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலும், 97879 70227, 70220 45795, 97860 50759 உள்ளிட்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News