உள்ளூர் செய்திகள்

160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

Published On 2022-12-02 09:14 GMT   |   Update On 2022-12-02 09:14 GMT
  • 160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது
  • 11 வகையான சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டது

அரியலூர்:

அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு, 160 கர்ப்பிணிகளுக்கு 11 வகையான சீர்வரிசைப் பொருள்கள் மற்றும் 5 வகையான கலவை சாதங்களை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் க.அன்பரசி, வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், வாலாஜா நகரம் ஊராட்சித் தலைவர் அபிநயா இளையராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் ம.மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News