உள்ளூர் செய்திகள் (District)

நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து விலக்கு: அரியலூர் மாவட்ட விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2023-04-09 06:14 GMT   |   Update On 2023-04-09 06:14 GMT
  • நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து விலக்கு: அரியலூர் மாவட்ட விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
  • பொதுமக்கள் உற்சா–கமாக கோஷம் எழுப்பி அரசுக்கு நன்றி தெரி–வித்தனர்.

உடையார்பாளையம்

காவிரி டெல்டா மாவட் டங்களில் உள்ள சேத்தி–யாத்தோப்பு, மைக்கேல் பட்டி, வடசேரியில் தனி–யார் மூலம் நிலக்கரி சுரங் கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை விலக்க வேண் டும் என்று பிரதமர் நரேந் திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

அரிய–லூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி நிலக்கரி திட்ட பகுதியான பருக்கள் கிரா–மத்தில் விவ–சாயிகள் மற்றும் பொது–மக்கள் இத்திட்டத் திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த–னர்.இந்தநிலையில் நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிக்கு விலக்கு அளிப்பதாக மத்திய சுரங் கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறி–வித்தார். இதையடுத்து அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பருக்கள் கிராமத்தில் அதனை வரவேற்ற மக்கள் மகிழ்ச்சியாக கொண்டா–டினர்.

மேலும் கிராமத்தின் முக்கிய பகுதியில் ஒன்று கூடிய மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங் கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்ப–டுத்தினர். உற்சா–கமாக கோஷம் எழுப்பி அரசுக்கு நன்றி தெரி–வித்தனர்.இதுகுறித்து விவசாயி புகழேந்தி கூறு–கையில், பருக்கள் கிராமம் முற்றும் முதலுமாக நிலக் கடலை முந்திரி உள்ளிட்ட விவ–சாயிகளை நம்பி பிழைக்கும் கிராமம்.இங்குள்ள மக்களுக்கு விவசா–யத்தை தவிர வேறு எது–வுமே தெரியாது. திடீரென நிலக்கரி சுரங்க ஏழு அறிவிப்பு வெளியா–னதும் மக்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

தற்போது மத்திய அமைச்சர் நிலக்கரி ஏல நடைமுறையில் இருந்து தமிழகப் பகுதிகளுக்கு விளக்கு அளித்து அறிவித் திருப்பது எங்கள் பகுதி விவசாயிகளுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது என்றார். விவசாயி சோமசுந்தரம் கூறுகையில், எங்கள் கிரா–மத்தில் நிலக்கரி திட்டத் திற்கு சுரங்கம் அமைக்க இருப்பதாக தகவல் பரவி–யதை அடுத்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். கடந்த மூன்று நாட்களாக நிம்மதி இன்றி என்ன செய்வது என்று எங்கள் கிராமம் மக்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். எங்களுக்கு இந்த கிராமத்தை விட்டு வேறு எங்கு சென்று தங்கு–வதற்கான வாய்ப்பு ஏற்பட்டா–லும் அது நிம்ம–தியை கொடுக்காது. இப் போது அரசு நிலக்கரி திட்ட ஏலத்தை தமிழகத் தில் விளக்கு அளித்து அறிவித்திருப்பது நிச்சயமாக எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றார்.


Tags:    

Similar News