உள்ளூர் செய்திகள்

ரூ.136.5 இலட்சம் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி திட்டம்

Published On 2023-07-19 06:36 GMT   |   Update On 2023-07-19 06:36 GMT
  • அரியலூரில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.136.5 இலட்சம் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி திட்டமிடப்பட்டுள்ளது
  • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தின்கீழ் இடுபொருட்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசும்போது, அரியலூர் மாவட்டத்தில், 5000 ஏக்கர் பரப்பளவில் ரூ.136.5 இலட்சம் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திருமானூர் வட்டார விவசாயிகளுக்கு இடுபொருட்களான ரசாயன உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறுவை மாற்றுப் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள், எண்ணெய் வித்து விதைகள் மற்றும் பயிர் வகை விதைகள் வழங்கப்பட்டும், குறுவை நெல் சாகுபடி திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது பகுதிகளில் உள்ள வேளாண் துறை அலுவலகங்களை அணுகி பயன்பெற வேண்டும் என்று அவர் கூறினார். நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, வேளாண் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளான பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News