உள்ளூர் செய்திகள்

பள்ளி கட்டிடங்கள் பராமரிப்பு பணிக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிதியுதவி

Published On 2022-07-17 10:05 GMT   |   Update On 2022-07-17 10:05 GMT
  • அரியலூர் மாவட்டம், தழுதாழைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி பராமரிப்புக்கான நிதியுதவியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியுள்ளது
  • இந்நிறுவனம் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கு தொடர்ந்து நிதியுதவியளித்து வருகிறது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், தழுதாழைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டது.

விழாவுக்கு ஊராட்சித் தலைவர் திலகவதி மகேந்திரன் தலைமை வகித்தார். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் காரைக்கால் பிரிவு முதன்மைப் பொது மேலாளர் தி.சாய்பிரசாத் கலந்து கொண்டு ஓஎன்ஜிசி சார்பில் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்து பேசியதாவது-

நிறுவனத்தின் சார்பில் ரூ.10.5 லட்சம் செலவில் பள்ளி கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு, மாணவர்கள் அமர்வதற்கு இருக்கை,மேஜைகளும், இதே போல் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கு தொடர்ந்து நிதியுதவியளித்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி, நிறுவனம் நாட்டின் எரிசக்தி தேவையை பெருமளவு பூர்த்தி செய்து வருகிறது. ஆண்டு வருவாயில் குறிப்பிட்ட தொகையை கல்வி, நலவாழ்வு, சுகாதாரம், மருத்துவம், பேரிடர் மேலாண்மை, கிராம மேம்பாடு, விளிம்புநிலை மக்களுக்கான வாழ்வாதாரம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகளில் அரசு துறைகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றிவருகிறது.

ஆண்டுக்கு சுமார் ரூ.300 கோடி ரூபாய் அளவுக்கு இந்நிறுவனம் தனது சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பயனுள்ளவகையில் செலவிட்டு வருகிறது என்றார்.

ஜெயம்கொண்டம் ரோஸ் அறக்கட்டளை இயக்நனர் ஜான். கே. திருநாவுக்கர, மத்திய அரசின் "சுஜித்தா பக்வாடா" எனும்

தூய்மையே சேவை திட்டம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழு உறுப்பினர்சுமதி இளங்கோவன் , பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ம.தனசெல்வி, வார்டு உறுப்பினர்கள் எம். சக்திவேல், பி.சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் க.திருமுருகன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சி.அன்பழகன் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News