உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை அறுத்து கொள்ளை முயற்சி

Published On 2022-09-21 10:00 GMT   |   Update On 2022-09-21 10:00 GMT
  • வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயன்படுத்தி வந்தனர்.
  • ஏ.டி.எம். மையத்தில் இருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இரு ந்து வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் தனியார் மில் ஒன்று செயல்படுகிறது. இந்த மில் அருகே பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

இந்த ஏ.டி.எம். மையத்தை அந்த பகுதியினரும், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் எப்போ தும் பணம் இருக்கும். இரவு நேரங்க ளில் அங்கு அதிகம் ஆள் நடமாட்டம் இருக்காது. இதனை பயன்படுத்தி நேற்று இரவு மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை யடிக்க முயன்றனர். வெல்டிங் எந்திரத்துடன் சென்ற அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பக்கமாக அறுத்து பணத்தை கொள்ளையடிக்க முzயற்சி செய்தனர்.

அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதுதொடர்பான தகவல் வங்கி அதிகாரிகளுக்கும் சென்றது. அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அலாரம் ஒலித்ததும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது. இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் மற்றும் போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு கொள்ளை யர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. மேலும் கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

Tags:    

Similar News