உள்ளூர் செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் சாருஸ்ரீ பரிசு வழங்கினார்.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கல்

Published On 2023-04-03 07:58 GMT   |   Update On 2023-04-03 07:58 GMT
  • கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டனர்.
  • சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரங்கின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருவாரூர்:

திருவாரூரில் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை 9 நாட்களுக்கு தமிழக அரசின் திருவாரூர் புத்தகத் திருவிழா நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையிலான மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசுத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் புத்தகத் திருவிழாவை இணைந்து நடத்தினர்.

கல்லூரி, பள்ளி மாணவர்கள், ஏராளமான பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்றனர்.

தினந்தோறும் சிறந்த தமிழறிஞர்களைக் கொண்டு புத்தகம் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெற்றது.

மேலும் பள்ளி மாணவ மாணவிகளிடம் பேச்சுப்போட்டி ஓவிய போட்டி விமர்சனப் போட்டி கள் என பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பரிசுகள் வழங்கினார்.

இந்த புத்தகத் திருவிழாவில் சிறை கைதிகள் பயன்பெறும் வகையில் புத்தக சேகரிப்பு அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது இதில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் புத்தகங்களை வழங்கினர் சுமார் 5000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரங்கின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News