உள்ளூர் செய்திகள் (District)

சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

Published On 2023-09-30 09:20 GMT   |   Update On 2023-09-30 09:20 GMT
  • திருவருட்பா, தெய்வமணிமாலை பாடல்களை மாணவர்கள் இசையோடு பாடினர்.
  • சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை களைய அரும்பாடு பட்டார் வள்ளலார்.

மன்னார்குடி:

மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி, நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து தமிழ்க்கூடல் நிகழ்ச்சி மேலகோபுரவாசலில் உள்ள வள்ளலார்அறச்சாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராசசேகரன் தலைமை தாங்கினார். வள்ளலாரின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவருட்பா, தெய்வமணிமாலை பாடல்களை மாணவர்கள் இசையோடு பாடி வடலூர் ராமலிங்க அடிகளுக்கு அவல், நாட்டு சர்க்கரை, பொட்டுக்கடலை வைத்து படையலிட்டு வழிபாடு நிகழ்த்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் ராசசேகரன் பேசுகையில்:- சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை களைய அரும்பாடு பட்டார் வள்ளலார் என்றார்.

பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் ராசகணேசன் பேசுகையில், உலக அமைதிக்கான வள்ளலாரின் ஜீவகாருண்யம், ஆன்ம நேய ஒருமைப்பாட்டுகளை கடைபிடிக்கவேண்டும் என்றார். உயிரிரக்கமும், ஒழுக்கமுமே உண்மையான கடவுள் வழிபாடு இதுவே வள்ளலாரின் சன்மார்க்க நெறிகள் என்றார்.

வள்ளலார் அறச்சா லையினர் மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கினர். மேலும், தமிழில் காலாண்டு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாண வர்களுக்கு வள்ளலாரின் நூல்களை வள்ளலார் சத்திய தருமசாலையினர் பரிசாக வழங்கி பாராட்டினர்.

Tags:    

Similar News