உள்ளூர் செய்திகள்

போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 

சிவகிரி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-07-21 08:17 GMT   |   Update On 2022-07-21 08:17 GMT
  • புளியங்குடி மகளிர் காவல்துறை சார்பாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தவறுதலாக ஏதாவது செயலியில் நீங்கள் பார்வையிட்டால் உங்களின் பெற்றோருக்கு பாதிப்பு ஏற்படும் என அறிவுறுத்தினர்.

சிவகிரி:

சிவகிரி சேனைத் தலைவர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் வைத்து புளியங்குடி மகளிர் காவல்துறை சார்பாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார். உதவி தலைமையாசிரியர் இசக்கிமுத்து தொகுப்புரை நிகழ்த்தினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புளியங்குடி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் மாலா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில்:- பள்ளி மாணவ- மாணவிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். தவறான வழியில் செல்லக்கூடாது, தேர்ந்தெடுக்கவும் கூடாது. செல்போனில் பாடம் சம்பந்தப்பட்ட பதிவுகளை மட்டும் பார்க்க வேண்டும். தவறுதலாக ஏதாவது செயலியில் நீங்கள் பார்வையிட்டால் உங்களின் பெற்றோருக்கு பாதிப்பு ஏற்படும்.

ஆகவே நீங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு தடம் மாறாமல் நல்ல முறையில் படித்து எதிர்காலத்தில் நல்ல முறையில் உயர்ந்த பதவியில் அமர்ந்து உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல பெயரை பெற்றுத்தர வேண்டும். உங்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் சார்ந்த ஆலோசனைகள் தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் பேசினர். தமிழாசிரியை சுப்புலட்சுமி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் முதல்நிலை காவலர் ஆனந்தி, ஆசிரியர் ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News