உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-09-20 09:14 GMT   |   Update On 2023-09-20 09:14 GMT
  • இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

சீர்காழி:

சீர்காழி நகராட்சி ஊழியக்காரன்தோப்பு நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஈசானி யத்தெருவில் அமைந்துள்ள நகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் முறை, குப்பைகளை எவ்வாறு கையாளுவது, மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து செயல்விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் வி.ஹேமலதா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் முன்னிலை வகித்தார். நகரமைப்பு ஆய்வர் மு.மரகதம் மற்றும் சுகாதார ஆய்வர் டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு விழிப்பு ணர்வு செயல்விளக்கம் அளித்தனர்.

அப்போது 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பி.கஸ்தூரிபாய் மற்றும் 5 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கலைச்செல்வி பங்கேற்றனர்.

Tags:    

Similar News