புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி
- ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் வயது வந்தோர் கல்வி இயக்கம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-2027-ம் ஆண்டு வரை நடைபெற உள்ளது.
- இந்த திட்டம் சார்பான விழிப்புணர்வு பேரணி பரமத்தியில் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் வயது வந்தோர் கல்வி இயக்கம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-2027-ம் ஆண்டு வரை நடைபெற உள்ளது.
இந்த திட்டம் சார்பான விழிப்புணர்வு பேரணி பரமத்தியில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை பரமத்தி வட்டார கல்வி அலுவலர் கவுரி தொடங்கி வைத்தார். வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சுபா முன்னிலை வைத்தார்.
பேரணியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரிய, ஆசிரியைகள், பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடு களை ஆசிரியர் பயிற்று நர்கள் பார்வதி மற்றும் செல்வராணி ஆகியோர் செய்திருந்தனர்.