உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கான பேச்சு போட்டி நடந்தது.

ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பேச்சு போட்டி

Published On 2023-03-03 10:04 GMT   |   Update On 2023-03-03 10:04 GMT
  • போட்டியில் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
  • பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பேராவூரணி வட்டார வள மையத்தில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-23 விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும்,சிகரம் தொட சிலேட்டை எடு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

போட்டியில் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள், அங்கயர்க்கண்ணி, கலாராணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

ஒன்றியத்தில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லாதோருக்கான, கற்றல் கற்பித்தலை ஊக்குவிக்கும் வண்ணம், மேற்கண்ட தலைப்பிற்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் தங்களின் கருத்துக்களை கூறினர்.

போட்டியில் சித்தாத்திக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவி. தாமரைச்செல்வன் முதலிடத்தை பெற்றார்.

2-ம் இடத்தை பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சிவகாமியும், 3-ம் இடத்தை திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து பெற்றனர்.

3 ஆசிரியர்களுக்கும், பரிசு தொகையும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியினை ஆசிரியர் பயிற்றுநர்கள் சரவணன் மற்றும் முனிராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.

முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் சிவமுருகன் நன்றி கூறினார். 

Tags:    

Similar News