உள்ளூர் செய்திகள்

அன்னதானம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் வழிபாடு

Published On 2022-12-12 09:10 GMT   |   Update On 2022-12-12 09:10 GMT
  • குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் அய்யப்ப பக்தர்கள் குழுவின் முதல் நாள் இரவு கன்னி பூஜை நடந்தது.
  • வழிபாட்டின் 3-ம் நாளில் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடன்குடி:

உடன்குடியூனியனுக்கு உட்பட்ட குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் அய்யப்ப பக்தர்கள் குழுவின் 36- வது ஆண்டை முன்னிட்டு முத்தாரம்மன் கோவில் கலையரங்கத்தில் முதல் நாள் இரவு கன்னி பூஜை நடந்தது. 2-ம்நாள் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 3-ம் நாள் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், மனோகரன், சாத்தாக்குட்டி, சுயம்புராஜ், முருகன் மற்றும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News