உள்ளூர் செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2022-11-11 10:02 GMT   |   Update On 2022-11-11 10:02 GMT
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகளூக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
  • இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சேலம்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட தொடங்கும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.2022-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதேபோல் புதிய இனங்களுக்கு இணையதளம் 15.12.2022 முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். மேலும், www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் உள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக அறை எண் 110-ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News