விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து கண்டுணர்வு பயணம்
- வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை (அட்மா) திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம் வழங்கப்பட்டது.
- மோகனூர் கனவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நீலமேகம் என்பவரது தேனீ பண்ணைக்கு நாமக்கல் வட்டார விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை (அட்மா) திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பு குறித்து
விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம் வழங்கப்பட்டது. அதன்படி,
தேனீ வளர்த்து விவசா யத்தில் கூடுதல் வருமானம் பெற்று வரும் மோகனூர் கனவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நீலமேகம் என்பவரது தேனீ பண்ணைக்கு நாமக்கல் வட்டார விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
தேனீ வளர்ப்பு குறித்த அவரது அனுபவங்களை நேரில் பெறவும், தேனீ வளர்ப்பின் தொழில் நுட்பங்கள் செயல் விளக்கத்துடன் செய்து காண்பிக்கவும், தேனீ பெட்டியின் பராமரிப்பு, தேனீ கூட்டம் பிரிந்து செல்லாமல் இருக்கப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தேன் பிரித்தெ டுக்கும் முறைகள், கலப்படம் இல்லாத தேனை நாமே தயாரித்து கூடுதல் வருமானம் பெறுதல், வேளாண்மை சார்ந்த உபதொழிலாக தேனீ வளர்க்கலாம் என விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது.
இந்த கண்டுணர்வு பயண ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் செய்தி ருந்தனர்.