உள்ளூர் செய்திகள்

கருமத்தம்பட்டியில் பாரதீய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-19 10:23 GMT   |   Update On 2022-07-19 10:23 GMT
  • 14 வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
  • விசைத்தறி மற்றும் நெச வாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர்.

கோவை:

இலவச வேட்டி சேலை திட்டங்களை ஆந்திர மாநில விசைத்தறி யாளர்களுக்கு வழங்கி தமிழக அரசு அங்கு கொள்முதல் செய்துள்ளது. இதனால் இங்குள்ள விசைத்தறி மற்றும் நெச வாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர். மேலும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இதனை கண்டித்து பா.ஜ.க. நெசவாளர் பிரிவு சார்பில் கருமத்தம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி பேசியதாவது:-

இலவச வேட்டி சேலை விசைத்தறி நெசவா ளர்களுக்கு கொடுக்காமல் வேறு மாநிலத்திற்கு கொடுக்கப்படுகிறது.தேர்தலின் போது நெசவாளர்களுக்கு கொடுத்த 14 வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

மேலும் தமிழ்நாடு தமிழகத்தின் வருவாயில் 50 சதவீதத்தை வரியாக கொடுக்கிறது. ஆனால் இங்கு முக்கிய தொழிலாக விளங்கும் ஜவுளி தொழிலை அரசு முடக்க நினைக்கிறது. பள்ளிச் சீருடை இலவச வேட்டி சேலை ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு வழங்காமல் வேறு மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவது இங்குள்ள விசைத்தறி மற்றும் நெசவாளர்களை மிகவும் பாதிக்கும். தமிழக அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கி றோம். என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர்க னகசபாபதி, நெசவாளர் பிரிவு மாநில தலைவர் கே. எஸ். பாலமுருகன், துணைத்தலைவர் தனலட்சுமி, மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்ட தலைவர் பரசுராமன், கோவை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கோபால்சாமி, மாவட்ட செயலாளர்கள் மாணிக்கவாசகம், சிதம்பரம், மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், கருமத்தம்பட்டி மண்டல தலைவர் மகேஷ், ஆர்த்தி ரவி கவிதா, சூலூர் ஒன்றிய பொதுச்செயலாளர் மகேந்திரன், அரசு தொடர்புத்துறை கோவை மாவட்ட தலைவர் மயில்சாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கை நிறை வேறாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர். 

Tags:    

Similar News