உள்ளூர் செய்திகள்

ரூ.30.75 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை

Published On 2023-06-15 10:12 GMT   |   Update On 2023-06-15 10:12 GMT
  • 4.25 லட்சம் ரூபாய் மதிப்பில், துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
  • திட்டப் பணிகளை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெத்ததாளப்பள்ளி ஊராட்சி துறிஞ்சிப்பட்டி கிராமத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில், குடியிருப்பு பகுதி தார்சாலை முதல் ஏற்கனவே உள்ள கழிவுநீர் கால்வாய் வரை பாதாள சாக்கடை அமைக்கப்படுகிறது. அதே போல், கனிமங்களும், குவாரிகளும் நிதியில் இருந்து 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் துறிஞ்சிப்பட்டியில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

ஒன்றிய பொது நிதியில் இருந்து, 4.25 லட்சம் ரூபாய் மதிப்பில், துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. அதே போல், பெத்தனப்பள்ளி கிராமத்தில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைக் கால்வாயும், 15வது நிதிக்குழு மான்யம் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பெத்தனப்பள்ளி கிராமத்தில் பாதாள சாக்கடைக் கால்வாய் என மொத்தம் 30.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி வெங்கடேசன், கவுன்சிலர் அமராவதி, முன்னாள் தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News