உள்ளூர் செய்திகள்

 தார்சாலை அமைக்கும் பணியை தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

தார்சாலை அமைக்க பூமிபூஜை

Published On 2023-07-01 09:17 GMT   |   Update On 2023-07-01 09:17 GMT
  • 1 கோடியே 18 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் திட்ட பணிக்கு பூமி பூஜை நடந்தது.
  • நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் பாக்கியலட்சுமி ஜெயராமன் தலைமை வகித்தார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம் குந்துகோட்டை ஊராட்சியில் குந்து கோட்டை கிராம கூட்டு சாலை முதல் ஈரு செட்டி ஏரி கிராமம் வரை உள்ள 3.5 கிலோமீட்டர் வரை கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 18 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் திட்ட பணிக்கு பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் பாக்கியலட்சுமி ஜெயராமன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் மூர்த்தி, ரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தளி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் விமலா திமுக ஒன்றிய செயலாளர்கள் திவாகர், ராஜா மற்றும் வார்டு உறுப் பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றிய ஒன்றிய குழு தலைவருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Tags:    

Similar News