மருதகுளம் கல்லூரியில் ரத்ததான முகாம்
- கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
- மாணவர்களுக்கு ரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
நெல்லை:
மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஒத்துழைப்புடன் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி ரத்ததானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ரவிசங்கர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அய்யப்பன், சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் வழி நடத்தினர்.
மேலும் மாணவர்களுக்கு ரத்ததானம் அவசியம் பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் உதவி பேராசிரியர் முஜீப் முகம்மது முஸ்தபா மற்றும் கல்லூரி அலுவலர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.