உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட யானை உடல்: அப்புறப்படுத்திய வனத்துறையினர்

Published On 2024-08-12 06:57 GMT   |   Update On 2024-08-12 06:57 GMT
  • பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யாமல் விட்டுள்ளனர்.
  • உடல் உபாதைகள், தொற்று நோய் பரவும் அபாயம்.

ஒகேனக்கல்:

கர்நாடகா மாநில காவிரி கரையோர பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்திருக்கிறது. இந்த யானையை கர்நாடகா மாநில வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அந்த யானை அடித்து வரப்பட்டு பிலிகுண்டுலு வழியாக மிதந்து வந்து தற்போது ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி பகுதியில் நடு ஆற்றில் உள்ளது.

உயிரிழந்த காட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்து இருப்பதால் உடல் பாகங்கள் தண்ணீரில் கலந்து மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்ட மக்கள் அந்த குடிநீரை பருகுவதால் உடல் உபாதைகள், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களில் கலங்களான ஆற்று நீர் காரணமாக பல உடல் உபாதைகள் வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது இந்த உயிரிழந்த யானை ஆற்றில் அடித்து வரப்பட்டதன் காரணமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீரை நம்பியுள்ள மக்கள் மீண்டும் உடல் உபாதைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.

எனவே கர்நாடகா வனத்துறையினர் உயிரிழந்த பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானையை அப்புறப்படுத்தி வனப்பகுதியிலேயே அடக்கம் செய்து இருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது.

இதனையடுத்து கர்நாடக வனத்துறையினர் ஆற்றில் மிதந்து கிடக்கும் யானையை மீட்டு கர்நாடகா வனப்பகுதியிலேயே அடக்கம் செய்ய உள்ளோம் என தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யானை பிரேத பரிசோதனை செய்த நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் அருகும் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News