உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் ரங்கநாதபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா

Published On 2023-05-22 09:03 GMT   |   Update On 2023-05-22 09:03 GMT
  • காலையில் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.
  • பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழுப்புரம்:

செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் மலை மீது உள்ளது ரங்கநாத பெருமாள் கோவில். இக்கோவில் பல்லவர் கால குடவரை கோவிலாகும். செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கு வணங்கிய தெய்வம். இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பிரமோற்சவ திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடந்தது. காலை, இரவு சாமி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலையில் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் ஏற்றப்பட்டு தேர் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராம ங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் மாட வீதி வழியாக சென்று மீண்டும் தேர் நிலையை அடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை யத்துறை மேல்மலை யனூர் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் ஜீவா னந்தம் மேற்பார்வையில் உபயதாரர்கள் மற்றும் கிராம பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்தி ருந்தனர். பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News