உள்ளூர் செய்திகள்

மருதமலை அடிவார பஸ் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை

Published On 2022-11-04 09:15 GMT   |   Update On 2022-11-04 09:15 GMT
  • இந்த அறையில் இரவு நேரத்தில் சிலர் அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்ைக வைத்துள்ளனர்.

வடவள்ளி,

கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பஸ்கள், கார்களிலும் பக்தர்கள் வருகின்றனர். காந்திபுரத்தில் இருந்து மருதமலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் வசதிக்காக மருதமலை அடிவாரம் பகுதியில் சமீபத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது.

அங்கு 15 கடைகள் 2 அலுவலகம், ஒரு தாய்மார்கள் பாலுட்டும் அறை மற்றும் மேல்தளத்தில் உணவகம் என பல்வேறு வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது.

சுற்றுலா தலமாக விளங்கும் மருதமலைக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருகிற நிலையில் தற்போது பஸ் நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இது பொதுமக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த அறையில் இரவு நேரத்தில் சிலர் அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பஸ் நிலையத்திற்கு இரவு காவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், உடனடியாக தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்ைக வைத்துள்ளனர்.

Tags:    

Similar News