உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் புருக்கோலி கொள்முதல் விலை உயர்வு
- ஏராளமான விவசாயிகள் தற்போது சைனீஷ் வகை காய்கறிகளை அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றனர்.
- புருக்கோலி தற்போது ரூ.100 முதல் 130 வரை கொள்முதல் விலை அதிகரித்துள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, டர்னீப், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
இதுதவிர ஏராளமான விவசாயிகள் தற்போது சைனீஷ் வகை காய்கறிகளை அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு பயிரிடப்படும் சைனீஷ் வகை காய்கறிகள், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சைனீஷ் வகை காய்கறிகளுக்கு எப்போதும் சீரான விலை கிடைத்து வருகிறது.
இதனால் அவற்றை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரியில் உற்பத்தியாகும் புருக்கோலிக்கு கடந்த சில வாரஙகளுக்கு முன்புவரை, ஒரு கிலோ ரூ.80 முதல் 100 வரை கொள்முதல்விலை கிடைத்து வந்தது. தற்போது ரூ.100 முதல் 130 வரை கொள்முதல் விலை அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.