உள்ளூர் செய்திகள்

காளை மாடுகளின் கொம்புகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் ரப்பர் பொருத்தினர்.

திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டில் கியூ ஆர் கோடு மூலம் களத்துக்குள் அனுமதிக்கப்பட்ட காளைகள்

Published On 2023-01-19 09:44 GMT   |   Update On 2023-01-19 09:44 GMT
  • ஜல்லிக்கட்டில் காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
  • பதிவு செய்த மாடுகளுக்கு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த திருக்கானூர்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வீரர்கள் காளைகளை அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்தது.

முன்னதாக இந்த ஜல்லிக்கட்டில் 542 காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்தது. பதிவு செய்த மாடுகளுக்கு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

இந்தப் பணிகளை தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில் ஏழும்பட்டி கால்நடை மருந்தக உதவி மருத்துவர் செரீப் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

கியூ ஆர் கோடு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இதேபோல் திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் வீரர்களை முட்டி காயம் ஏற்படாமல் இருப்பதற்காக மாடுகளின் கொம்புகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் ரப்பர் பொருத்தியிருந்தனர்.

Tags:    

Similar News