ஊட்டியில் பழைய பொருட்களில் தயாரான பட்டாம்பூச்சி-ரெயில்
- பூங்காவில் சுற்றுலா பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடந்தது.
- குழந்தைகள் டிராக்டர், ரெயிலில் ஏறி பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் துவக்கி வைத்தனர்.
இந்த கண்காட்சியில் பல்வேறு துறை அரங்க ங்களும் இடம்பெற்றிருந்தன.
இதில் குறிப்பிடும்படியாக கூடலூர் நகராட்சியை சேர்ந்த அரங்கமானது பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
தூக்கி எறியப்பட்ட பழைய பொருட்களில் இருந்து பிரம்மாண்டமான பட்டாம்பூச்சி, டயர்களில் வடிவமைக்கப்பட்ட பூந்தொட்டிகள், டிராக்டர், புகைவண்டி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இது அங்கு வந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குழந்தைகளை கவர்ந்திழுத்தது. குழந்தைகள் டிராக்டர், ரெயிலில் ஏறி பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தாவரவியல் பூங்கா வி ற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் இந்த வடிவமைப்பின் முன் நின்றும், தங்கள் குழந்தைகளை அமர வைத்தும் புகைப்படம் மற்றும் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.