உள்ளூர் செய்திகள் (District)

குருபரப்பள்ளி பகுதியில் சுற்றி வரும் காட்டு யானைகள்.

குருபரப்பள்ளி பகுதியில் முகாமிட்டுள்ள 3 யானைகளை மேலுமலை வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரம் -மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

Published On 2022-11-13 09:36 GMT   |   Update On 2022-11-13 09:36 GMT
  • காட்டு யானைகள் குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  • 3 காட்டு யானைகளை மேலுமலை வன பகுதிக்கு விரட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியில் பிக்கனபள்ளி மற்றும் மேலுமழை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த மூன்று காட்டு யானைகள் குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காட்டு யானைகள் சுற்றி, சுற்றி அப்பகுதியில் உலா வருவதை சிப்காட் பகுதியில் இருந்து விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

மேலும் இந்த காட்டு யானைகள் அருகே உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லாதவாறு தடுத்து வனத்துறையினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டாசுகள் மூலம் யானைகளை விரட்ட வனத்துறையினர் போராடி வருகின்றனர். ஆனால் காட்டு யானைகள் வனபகுதிக்கு செல்லாமல் அப்பகுதி விவசாய நிலங்களில் மேய்ந்து அருகே உள்ள ஏரியில் ஆனந்த குளியல் போட்டு வருகிறது.காட்டு யானைகள் வனப்பகுதிக்கு விரட்டபட உள்ளதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் விவசாயிகள் பாதுக்கப்பான இடங்களுக்கும் செல்ல வேணடும் என ஒலிபெருக்கி முலமாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் குருபரப்பள்ளி சிப்காட் பகுதியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகளை மேலுமலை வன பகுதிக்கு விரட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News