உள்ளூர் செய்திகள்

சுடுகாட்டை சுற்றி குவிந்துள்ள குப்பைகள்.

சுடுகாட்டை சுற்றி குவிந்துள்ள குப்பை அகற்றப்படுமா?

Published On 2023-06-25 09:25 GMT   |   Update On 2023-06-25 09:25 GMT
  • பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
  • குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் பேரூராட்சி சுடுகாடு உள்ளது. இந்த வளாகத்தில் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. சுடுகாட்டை சுற்றி உள்ள இடங்களிலும் குப்பைகள் அதிகளவில் குவிந்துள்ளன.

இந்த குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் இறுதிசடங்கு நிகழ்வில் பங்கேற்ற செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கூறும்போது;- திருவையாறில் சேகரமாகும் குப்பைகள் காவிரி கரையில் கொட்டப்பட்டு மக்காத குப்பை சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. சுடுகாடு வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News