திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் ரத்த தான கழகத்திற்கு பாராட்டு சான்றிதழ்
- ஆதித்தனார் கல்லூரியில் வருடத்திற்கு 2 முறை ரத்த தான முகாம் நடத்தப்படுகின்றது.
- ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 200 மாணவர்கள் ரத்ததானம் செய்கின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் சார்பாக வருடத்திற்கு 2 முறை ரத்த தான முகாமானது ஆதித்தனார் கல்லூரியில் நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு முகாமிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்கின்றனர். அது மட்டுமல்லாது எப்பொழுதெல்லாம் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுகின்றதோ, அப்பொழுது மாணவர்கள் மருத்துமனைக்கும் நேரடியாகச் சென்று ரத்ததானம் செய்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 200 மாணவர்கள் ரத்ததானம் செய்கின்றனர். மாணவர்களின் தன்னலமற்ற இந்த சேவையைப் பாராட்டும் வகையில் ஆதித்தனார் கல்லூரியில் ரத்த தான கழகத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் டி.பொன்ரவி, மருத்துவர் பாபநாசகுமார் மற்றும் மருத்துவர் சசிகலா முன்னிலையில் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் மற்றும் கல்லூரிச் செயலர் ஜெயக்குமார், ரத்ததான கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி சகாய சித்ரா மற்றும் சி.மோதிலால் தினேஷ் ஆகியோரைப் பாராட்டினர்.