உள்ளூர் செய்திகள்

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு, ஷாநவாஸ் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்றார்.

புதுச்சேரியில் விரைவில் மாற்றம் நிகழும்- நாகை எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2022-12-20 07:58 GMT   |   Update On 2022-12-20 07:58 GMT
  • மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் தமிழக ஆளுநர் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்
  • புதுச்சேரி மக்கள் இப்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சர்புதீன் மரைக்காயர் இல்லத் திருமணம் நாகூரில் நடைபெற்றது.

அதில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுத்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது நாராயணசாமிக்கு, ஷாநவாஸ் எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்று பேசியதாவது:-

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதை எதிர்த்து அன்று நாராயணசாமி குரல் எழுப்பினார்.

அதையே இன்றைய முதலமைச்சர் ரங்கசாமியும் செய்து வருகிறார். ஆளுநரால் புதுச்சேரிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பிரச்சனை தான். 20- க்கும் மேற்பட்ட மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் தமிழ்நாடு ஆளுநர் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

இதையெல்லாம் எதிர்த்து அனைவரும் போராட வேண்டும். புதுச்சேரி மக்கள் இப்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அங்கு மாற்றம் நிகழும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் காங்கிரஸ் பிரமுகர்கள் நவ்ஷாத், ரபீக், விடுதலை சிறுத்தை கட்சி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News