ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவிலில் சப்பர பவனி
- முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா யாக பூஜையுடன் தொடங்கி 8 நாட்கள் நடைபெற்றது.
- இரவில் சாம பூஜையை தொடர்ந்து அம்மனின் சிம்ம வாகனத்தில் சப்பர பவனி நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா யாக பூஜையுடன் தொடங்கி 8 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் திருவிளக்கு பூஜை, வில்லிசை, கும்மி அடித்தல், வான வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாள் விழா அன்று காலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் அமைந்துள்ள செந்தில் விநாயகர் ஆலயத்தில் இருந்து அலங்கார யானை முன் செல்ல பால்குட பவனி நடந்தது. இதனை சாகுபுரம் டி.சி.டபுள்யூ நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அம்மனுக்கு கும்ப பூஜையும், பின்னர் அன்னதானமும் நடைபெற்றன. மதியம் அம்மனுக்கு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தன. தொடர்ந்து சுவாமிகள் மஞ்சள் நீராடி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதல், பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
இரவில் சாம பூஜையை தொடர்ந்து அம்மனின் சிம்ம வாகனத்தில் சப்பர பவனி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.