உள்ளூர் செய்திகள்

நாளை மறுநாள் சதுர்த்தி விழா: நாமக்கல்லில் 655 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு

Published On 2022-08-29 10:04 GMT   |   Update On 2022-08-29 10:04 GMT
  • 27 காவல் நிலைய எல்லைக்கு உட்பட சுமாா் 655 இடங்களில் சிலைகள் வைத்து வழிபட காவல் துறை சாா்பில் அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.
  • உரிய அனுமதி கோரி இதுவரை 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

நாமக்கல்:

நாமக்கல்லில் நாளை மறுநாள்(புதன்கிழமை) விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 27 காவல் நிலைய எல்லைக்கு உட்பட சுமாா் 655 இடங்களில் சிலைகள் வைத்து வழிபட காவல் துறை சாா்பில் அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. உரிய அனுமதி கோரி இதுவரை 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இன்னும் 2 நாட்கள் உள்ளதால் சிலைகள் வைக்க அனுமதி கோரி வரும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பீடத்துடன் சோ்த்து 10 அடி உயரத்துக்கு உட்பட சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், கடந்த முறை விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 655 இடங்களில் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டன. நிகழாண்டிலும் அதே எண்ணிக்கையில் வைக்க அனுமதி வழங்கப்படும். பிரச்சினை இல்லாத பகுதியாக இருந்தால் கூடுதல் அனுமதி வழங்கப்படும் என்றாா்.

Tags:    

Similar News