உள்ளூர் செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை பனிக்கட்டிகளை போல மிதப்பதை படத்தில் காணலாம்.

ஆற்றில் ரசாயன நுரை பனிக்கட்டிகளை போல மிதந்து நாற்றம் வீசி வருகிறது

Published On 2023-06-03 09:48 GMT   |   Update On 2023-06-03 09:48 GMT
  • தென்பெண்ணை ஆற்றில் அதிகளவிலான ரசாயன நுரை பனிக்கட்டிகளை போல மிதக்கிறது.
  • நுரை காற்றில் பறந்து செடி கொடிகளை சேதப்படுகிறது.

ஓசூர்,

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று விநாடிக்கு 750 கனஅடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 640 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று அணைக்கு விநாடிக்கு 530 கன அடி நீர் வந்தது. விநாடிக்கு 640 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

இதனையடுத்து தென்பெண்ணை ஆற்றில் அதிகளவிலான ரசாயன நுரை பனிக்கட்டிகளை போல மிதந்து சென்றும், நுரை காற்றில் பறந்து அப்பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் செடி, கொடிகள் மீதும், அந்த வழியாத செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது படர்வதாலும், விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News