உள்ளூர் செய்திகள்

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

Published On 2024-11-12 01:56 GMT   |   Update On 2024-11-12 02:01 GMT
  • நேற்ற இரவு முதல் மழை பெய்து வருகிறது.
  • காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்.

தெற்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழைப்பு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுறு்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும் சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

பின்னர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். ஆனால் கல்லூரிகள் வழக்கும்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News