சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை மீது ஏறி தரிசனம் தடை குறித்து விசாரணை நடத்த வேண்டும் காங்கிரஸ் பிரமுகர் மனு
- சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை மீது ஏறி தரிசனம் தடை குறித்து விசாரணை நடத்த வேண்டும் காங்கிரஸ் பிரமுகர் மனு கொடுத்தார்
- கோவிலுக்கு நன்கொடை மற்றும் கணக்குகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியி டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா இந்து அறநிலையத் துறை அதிகாரியிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் சுவாமி தரிச னத்திற்கு தடைவிதித்தது காரணம் குறித்து விசா ரணை நடத்த வேண்டும். ஆயிரங்கால் மண்ட பத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடை பெற்ற திருமணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
கோவிலில் உள்ள பல்வேறு இடங்களை இடிப்பதற்கு தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையில் அனுமதி பெறாமல் இடித்த தை குறித்து விசாரணை நடத்தி தீட்சிதர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவிலுக்கு நன்கொடை மற்றும் கணக்குகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியி டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.