உள்ளூர் செய்திகள் (District)

 ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Published On 2022-06-10 23:53 GMT   |   Update On 2022-06-11 01:20 GMT
  • மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக் கூடை வழங்கி முதலமைச்சர் வாழ்த்து.
  • ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் பல நெஞ்சங்களை இணைக்க வாழ்த்து

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா-ரியாஸ்தீன் ஷேக் முகமது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் பங்கேற்று மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக் கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து சமூக வலைதளப் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது:

ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் நடைபெற்ற, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் முகமது ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் புதுமண இணையரை வாழ்த்தினேன்.

அன்புக்குரிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது உயிரோட்டமான இசையால் எல்லைகளையும் தடைகளையும் கடந்து மேலும் பல நெஞ்சங்களை ஆற்றவும் இணைக்கவும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News