உள்ளூர் செய்திகள் (District)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரியில் பேரூர் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.

சிவகிரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Published On 2023-03-01 09:37 GMT   |   Update On 2023-03-01 09:37 GMT
  • பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் விழாவில் முன்னிலை வகித்தார்.
  • பிறந்தநாள் விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிவகிரி:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகிரி பேரூர் தி.மு.க. சார்பில் சிவகிரி பஸ் நிலையம் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் மருதப்பன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், பேராசிரியர் நல்லசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் முனி யாண்டி, மருதுபாண்டியன், சி.எஸ்.மணி, தங்கராஜ், கார்த்திக், முருகன், அழகு சுந்தரம், ராமச்சந்திரன், முத்தையா, குமாரவேல், ஆனந்தா ஆறுமுகம், பேரூர் துணை செயலாளர், பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News