கடலூர் முதுநகரில் பரபரப்பு இரு கோஷ்டியினர் மோதல்: வீட்டின் கண்ணாடிகள் உடைப்பு : 10 பேர் மீது வழக்கு
- 6 பேர் குடிபோதையில் அன்பழகன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்கள்.
- தலித் வளவனை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.
கடலூர்:, அக்.25-
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தலித் வளவன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று தலித்வளவன் உள்ளிட்ட 6 பேர் குடிபோதையில் அன்பழகன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் கதவு மற்றும் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தலித் வளவனை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலித் வளவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் தலித் வளவன், தமிழ், விக்கி உள்ளிட்ட 6 பேர் மீதும், தலித் வளவன் கொடுத்த புகாரின் பேரில் பால்ராஜ், திலீப், அஜித், சதீஷ் என மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்கடலூர் அருகே பில்லாலி தொட்டி சேர்ந்தவர் குரு (வயது 23) இவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் நத்தப்பட்டு கஷ்டம்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது குடிபோதையில் நின்று கொண்டிருந்த 3 நபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் குருவை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பாவாடைராயனை 3 பேர் தாக்கினர். இந்த மோதலில் குரு மற்றும் பாவாடைராயன் ஆகியோர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை சேர்க்கப்பட்டனர். இது குறித்து குரு கொடுத்த புகாரின் பேரில் நத்தப்பட்டு காலனியை சேர்ந்தவர்கள் பாவாடைராயன், அறிவழகன், முருகன் மற்றும் பாவாடைராயன் கொடுத்த புகாரின் பேரில் பில்லாலி தொட்டி சேர்ந்தவர்கள் குரு, வசந்தகுமார், சாலக்கரையை சேர்ந்த ராமு என 6 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.