உள்ளூர் செய்திகள்

ரூ.6 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

Published On 2023-02-25 09:03 GMT   |   Update On 2023-02-25 09:03 GMT
  • வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது.
  • ஏலத்திற்கு 8 ஆயிரத்து 136 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.


பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெறற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 99ஆயிரத்து 531-க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 136 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.79-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.19-க்கும், சராசரியாக ரூ.78.59-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 6 ஆயிரத்து 749-க்கு விற்பனை நடைபெற்றது.


Tags:    

Similar News