சுற்றுலா பேருந்து மோதி தேங்காய் வியாபாரி சாவு
- சுற்றுலா பேருந்து இருசக்கர வாகன த்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- சின்னசாமி தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டு புளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 45). இவர் எழுச்சம்பள்ளம் பகுதியில் தேங்காய் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் தேங்காய் மண்டியை மூடி விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தருமபுரிக்கு திருமண நிகழ்ச்சிக்காக பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா பேருந்து இருசக்கர வாகன த்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் சின்னசாமி தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அந்த சாலை வழியாக சென்றவர்கள் போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தியதில் சுற்றுலா பேருந்தை ஓட்டி வந்தவர் பாண்டிச்சேரி மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் (வயது 22) என்பது தெரிய வந்தது.
உடனே போலீசார் கோபிநாத்தை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை நடந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.