உள்ளூர் செய்திகள்

பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-03-08 08:51 GMT   |   Update On 2023-03-08 08:51 GMT
  • நோயாளிகளுக்கு சிறப்பான சிகிக்சை அளிக்க வேண்டும்.
  • குடிநீர் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீராக வைத்திருக்க வேண்டும்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், படுக்கை வசதி, மருந்துகள் இருப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே, மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, பொது பிரிவுகளை பார்வையிட்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும்.

குடிநீர் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீராக வைத்திருக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்று மருத்து வர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை இன்புளுன்சா வைரஸ் காய்ச்சல் பரவவில்லை. ரூ.78 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் -கும்பகோணம் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திலகம், பாபநாசம் தலைமை மருத்துவ அலுவலர் குமரவேல், தாசில்தார் பூங்கொடி, பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சுதா மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News