உள்ளூர் செய்திகள்

வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2023-05-04 10:03 GMT   |   Update On 2023-05-04 10:03 GMT
  • தில்லையாடி பெரிய வாய்க்கால் ரூ. 21 லட்சம் செலவில் 22 கிலோமீட்டர் தூரம் தூர்வாரும் பணி நடைபெற்றது.
  • உழவர் குழுவினர் உள்ளிட்ட பலர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் அருகே தில்லையாடி கிராம ஊராட்சியில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தில்லையாடி பெரிய வாய்க்கால் ரூ. 21 லட்சம் செலவில் 22 கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணி நடைப்பெற்றுவருகிறது.

இந்நிலையில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஏ.பி. மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் விஜயபாஸ்கர், தாசில்தார் காந்திமதி, ஊராட்சி செயலர் செல்வராணி, மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர், உழவர் குழுவினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News