உள்ளூர் செய்திகள்

கொடியேற்றம் நடைபெற்றதையும், சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளியதையும் காணலாம்.

சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவிலில் பிரமோற்சவம் தொடக்கம்

Published On 2022-08-23 09:17 GMT   |   Update On 2022-08-23 09:17 GMT
  • திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு தெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும்.
  • இந்நாட்களில் சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் பலவித வாகனங்களில் காலையும், மாலையும் வீதியுலா வருவது சிறப்பாகும்.

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் விவாஹ வரம் தந்து அருளக்கூடியவர் இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 10 நாள் பிரமேற்சவத்தில் சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபத்தில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு தெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும் என்பது உண்மை.

இக்கோயில் ஞானபுரத்தில் கர்க மகரிஷியால் வர்ணிக்கப்பட்டிருக்கிற 108 கணபதி ஸ்தலங்களுள் 81-வது ஸ்தலமான உன்னதபுரம் என்கிற மெலட்டூரில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

இந்த கோவில் தஞ்சாவூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் மெலட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் மெலட்டூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அய்யர், கணேச அய்யர், சிவராம அய்யர் ஆகியோரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வருடந்தோறும் விநாயகர் சதுர்த்திவிழா 10 நாட்கள் பிரமோற்சவமாக நடந்து வருகிறது.

இந்த நாட்களில் சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் பலவித வாகனங்களில் காலையும், மாலையும் வீதியுலா வருவது சிறப்பாகும்.

தவிர பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7வது நாள் நடைபெறும் விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக அரிதான நிகழ்ச்சியாகும்.

அன்றைய தினம் காலையில் தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு சித்திபுத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெறும் இது தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்

இந்நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

திருமணம் ஆகாதவர்களும், திருமணம் காலதாமதமாகும் ஆண்களும், பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து தரிசித்து பிரார்த்தனை செய்து மலர் மாலையும், மஞ்சள் கயறும் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு பிரமோற்சவ விழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

4ம்நாள் காலை சுவாமி வெள்ளி பல்லக்கிலும், 5ம் நாள் ஓலை சப்பரத்திலும் வீதியுலா நடைபெற உள்ளது.

7ம் நிகழ்ச்சியாக 28ம்தேதி காலை 9.30 மணியளவில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவமும், 30ம்தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News