உள்ளூர் செய்திகள்

லோக் அதாலக் நடைபெற்றபோது எடுத்தபடம்.

சட்ட பணிகள் குழு மூலம் திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் 286 வழக்குகளுக்கு சமரச தீர்வு

Published On 2022-11-13 08:07 GMT   |   Update On 2022-11-13 08:07 GMT
  • திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலக் நடைபெற்றது.
  • 4 வழக்குகளில் விவாகரத்து கோரியிருந்த தம்பதியினர் சேர்த்து வைக்கப்பட்டனர்.

திருச்செந்தூர்:

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவின்படி திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலக் நடைபெற்றது. இதில் சார்பு நீதிமன்ற நீதிபதி வஷீத்குமார் தலைமையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி.வரதராஜன் முன்னிலையில் 286 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

இதில் இந்து திருமண அசல் வழக்கு, வங்கி வராக்கடன், பயிர்கடன், கல்வி கடன் வழக்குகள், சிறு, குறு வழக்குகள், உரிமையியல் வழக்குகள் உட்பட 286 வழக்குகளுக்கு ரூ.3,21,59,053-க்கு தீர்வு காணப்பட்டது.

மேலும் 4 வழக்குகளில் விவாகரத்து கோரியிருந்த தம்பதியினர் சேர்த்து வைக்கப்பட்டனர். இதில் திருச்செந்தூர் வக்கீல் சங்க தலைவர் சந்திரசேகரன், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News