உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம்.

ராகுல்காந்தி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-13 08:39 GMT   |   Update On 2023-04-13 08:39 GMT
  • தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • ஐ.என்.டி.யூ.சி. மாநில பொது செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமை தாங்கினார்.

தூத்துக்குடி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொது செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி முன்னிலை வகித்தார்.

வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், டி.சி.டி.யு. மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், கலைப்பிரிவு தலைவர் பெத்துராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநகர பொதுச்செயலாளர் நம்பிசங்கர், எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், வர்த்தக பிரிவு செயலாளர் நேரு, தெற்கு மண்டல பொதுச்செயலாளர் தனசேகர், மாப்பிள்ளையூரணி பரமசிவன், சேகர், சேக்ஸ்பியர், தெர்மல் முத்து, நாராயணன், அழகு, பாலகிருஷ்ணன், அமைப்பு தொழிலாளர் காங்கிரஸ் சுந்தர்ராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி, பாலசுப்ரமணியன், பேரையா, தனபால், காமாட்சி தனபால், எஸ்.சி. பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு ஜேசுதாசன், மீனவரணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், உமா மகேஸ்வரி, சிவாஜி விஜயா, செல்வம், அல்போன்ஸ், சுரேஷ்குமார், ஜான் வெஸ்லி, காங்கிரஸ் நிர்வாகிகள் முத்துராஜா, முத்துராஜ், ராஜ்குமார், ஜெயபால், ஜோதி ராமலிங்கம், மாரியப்பன், முத்து மாலா, சுமித்ரா, குணசீலி, சோனியா ஐ.என்.டி.யு.சி.யை சேர்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், சாரதி, கவுதம், பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News