உள்ளூர் செய்திகள் (District)

தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் லலிதா ஆய்வு.

இளையாளூர் ஊராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி- கலெக்டர் ஆய்வு

Published On 2023-01-07 10:22 GMT   |   Update On 2023-01-07 10:22 GMT
  • பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
  • வகுப்பறையில் பயிலும் மாணவர்களிடம் படிப்பு சம்பந்தமாக கலந்துரையாடினார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், இளையாளூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.12 இலட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சைக்கிள் நிறுத்தும் கூடம் கட்டும் பணியும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.70 இலட்சம் செலவில் இ.ஏ.ஹச் நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், பள்ளிக் கட்டடங்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.17.32 இலட்சம் செலவில் அகரங்குடி ஊராட்சி ஒன்றிய உதவிபெறும் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டி முடிவு பெற்றதை பார்வையிட்டு வகுப்பறையில் பயிலும் மாணவர்களிடம் படிப்பு சம்பந்தமாக கலந்துரையாடல் செய்தனர்.

15-வது மானிய நிதி குழுத் திட்டத்தின் கீழ் (வி.பி.) ரூ.7.25 இலட்சம் செலவில் அகரங்குடி ஊராட்சி காயித மில்லத் தெருவில் தார்சாலை அமைக்கும் பணியினையும், அரங்கக்குடியில் ஊரா ட்சி ஒன்றிய உதவிபெறும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை சாப்பிட்டு ஆய்வு செய்தும், பள்ளிக் கட்டடங்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் (2021-2022) திட்டத்தின் கீழ் ரூ.94 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடம் பழுது பார்க்கும் பணி என பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும், துரிதமாகவும் முடிக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் ஜனகர், ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல் அன்சாரி, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News