உள்ளூர் செய்திகள் (District)

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

Published On 2023-03-17 09:47 GMT   |   Update On 2023-03-17 09:47 GMT
  • எந்திரங்களைக் கொண்டு தான் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் வெறும் கைகளால் சுத்தம் செய்யக்கூடாது

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் மனித கழிவுகளை அகற்றும் பணி குறித்து பணியாளர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

அதில் பேசிய பேரூராட்சி செயல்அலுவலர் டார்த்தி தூய்மை பணியாளர்கள் மறுவாழ்வு சட்டம் 2013 படி அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பாதாள சாக்கடை, செப்டிக் டேங்க், மனித மலம் ஆகியவற்றை கைகளால் சுத்தம் செய்யக்கூடாது.

எந்திரங்களைக் கொண்டு தான் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வெறும் கைகளால் சுத்தம் செய்யக்கூடாது என்பதனையும் எவர் கூறினாலும் உத்தரவிட்டாலும் மனித கழிவை கைகளால் அகற்ற கூடாது என அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை தாங்கினார். தூய்மை பேரூராட்சி தலைவர் துப்புரவு ஆய்வாளர் ரவிந்திரன், மற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News