தென்னை மரத்தில் சுருள் வெள்ளை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் - வேளாண்மை துறை விளக்கம்
- ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ யானது 200-க்கும் மேற்பட்ட பயிர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
- இதற்கு தீர்வாக விவசாயிகள் தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக தென்னை ஒலையின் அடிப்புறத்தில் பீச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்கலாம்.
உடன்குடி:
உடன்குடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில் அதிகமாக தென்னை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்னை பயிரில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. வறண்ட காலநிலை நிலவும் சமயங்களில் இதன் தாக்குதல் பரவலாக காணப்படும். எனவே தென்னை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களை முறையாக கண்காணித்து பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். சுருள் வெள்ளை ஈக்கள் வட்ட அல்லது சுருள் வடிவிலான மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் அடிப்பரப்பில் தனித்தனியாக இட்டு மெழுகுப் பொருளால் ஒன்றி இணக்கப்பட்டு அரை வட்டமாக காட்சியளிக்கும்.
குஞ்சுகளானது இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. இவை கூட் டம், கூட்டமாக தென்னை ஓலையின் அடிப்பகுதியில் காணப்படும். 20நாட்களில் முழுவளர்ச்சி அடைந்த ஈக்களாக மாறி காற்றின் திசையில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்க ளில் பாதிப்பை ஏற்படுத்து கின்றன.
மேலும் இந்த ஈக்களில் இருந்து வெளியேற்றப்படும் பசை போன்ற கழிவு திரவம் கீழே உள்ள இலைகளின் மேல் படர்ந்து கேப்னோடியம் என்ற கரும்பூசணம் வளர ஏதுவாகிறது. இவ்வாறு மேற்புறம் கருப்பாக மாறிய ஓலையில் பச்சையம் செயல் இழந்து மகசூல் குறையும் வாய்ப்புள்ளது. ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ யானது 200-க்கும் மேற்பட்ட பயிர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. வாழை, கொய்யா, சீதாப்பழம், மா, பலா போன்றவையும் இதன் தாக்குதலுக்கு உள்ளாகும். ஆனால் தென்னையை மிக அதிகளவில் தாக்கும் தன்மை வாய்ந்தது. இதற்கு தீர்வாக விவசாயிகள் டிராக்டரில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக தென்னை ஒலையின் அடிப்புறத்தில் பீச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்கலாம். மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகள் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையது. எனவே 3அடி நீளம் மற்றும் 1அடி அகலமுடைய பாலிதீன் தாள்களால் ஆன ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 20எண்ணிக்கையில் தென்னை தோட்டங்களில் 5முதல் 6அடி உயரத்தில் வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட மரங்களுக்கு 0.5சதவீதம் வேப்ப எண்ணெய் 5சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை தேவையான அளவு ஒட்டும் திரவகத்துடன் கலந்து தென்னை ஒைல யின் அடிப்பகுதியில் நன்கு படுமாறு 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளித்து தாக்குதலை குறைக்கலாம். மாறாக ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.