குன்னூர் ஏல மையத்தில் தேயிலைதூள் விற்பனை ஜோர்
- சி.டி.டி.ஏ ஏல மையத்தில் நடப்பு ஆண்டுக்கான 39-வது ஏலம் நேற்று நடைபெற்றது.
- மீதம் உள்ள 30 சதவீதம் தேயிலை இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு-குறு விவசாயிகள் உள்ளனர்.
இங்கு உற்பத்தியாகும் தேயிலைதூள்கள், சி.டி.டி.ஏ தனியார் ஏலமையம் மற்றும் அரசுக்கு சொந்தமான இன்கோசர்வ் ஏலமையம் ஆகியவை மூலம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாட்டை சேர்ந்த வர்த்தகர்க ளும் பான் இந்தியா திட்ட த்தின்கீழ் தேயிலைதூள்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குன்னூரில் உள்ள சி.டி.டி.ஏ ஏல மையத்தில் நடப்பு ஆண்டுக்கான 39-வது ஏலம் நேற்று நடைபெற்றது.
இதில் 22,8,778 கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அவற்றில் டஸ்ட் ரகம் 5,694 லட்சம் கிலோவும், இலைரகம் 17,0884 லட்சம் கிலோவும் அடங்கும்.
குன்னூர் ஏலமையத்தில் விற்பனை சுறுசுறுப்பாக தொடங்கியது. இதில் 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர். அப்போது டஸ்ட்ரகம் கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.80 முதல் 85 வரையிலும், இலைரகம் கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ.90 முதல் 110 வரையிலும், அதிகப ட்சமாக கிலோ ஒன்றிற்கு ரூ.120 முதல் ரூ.160 வரையி லும் விலை கிடைத்து உள்ளது.
ஆகமொத்தம் 70 சதவீதம் தேயிலைதூள்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. எனவே மீதம் உள்ள 30 சதவீதம் தேயிலை இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது.