உள்ளூர் செய்திகள் (District)

கோத்தகிரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2022-09-26 10:09 GMT   |   Update On 2022-09-26 10:09 GMT
  • 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
  • முகாமில் ஏராளமான பொதுமக்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 10 மையங்களில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் காலை துவங்கிய தடுப்பூசி முகாமை நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் பலர் உடன் இருந்தனர். பேரூராட்சி வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், மாதம் இறுதி வரை பூஸ்டர் தடுப்பூசிகளை இலவசமாக போட்டுக் கொண்டு பயனடையலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News