உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்திகளை ஏலத்திற்கு கொண்டு வந்த சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் .

போச்சம்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ரூ.11 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

Published On 2023-02-09 10:02 GMT   |   Update On 2023-02-09 10:02 GMT
  • மேலாண்மை இயக்குநர் சுந்தரம் பருத்தி ஏலத்தை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
  • 20 டன் பருத்தியை ரூ.11 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர்.

மத்தூர்

கிருஷ்ணகிரி மா வட்டம் போச்சம்பள்ளி தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.11 லட்சத்திற் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் பயிரிடபட்டு அறுவடை செய்த பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்து பயனடைந்தனர். இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியபாரிகள் கலந்து கொண்டு 20 டன் பருத்தியை ரூ.11 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர். இதனால் நல்ல விலை போனதால் விவசாயிகள் மகிழ்சியடைந்தனர்.

முன்னதாக துணைபதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுந்தரம் கலந்து கொண்டு பருத்தி ஏலத்தை தொடக்கி வைத்து பார்வையிட்டார். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயபால் துணை தலைவர் சக்கரவர்த்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொது மேலாளர் முருகன், அலுவலக பணியாளர்கள் விஜி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News